தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

நிலநடுக்கத்தால் வளர்ந்த எவரெஸ்ட் சிகரம் - புதிய உயரம் என்ன தெரியுமா?

காத்மாண்டு: 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் முன்பு இருந்ததைவிட எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 0.86 மீட்டர் அதிகரித்து 8848.86ஆக உயர்ந்துள்ளது.

Mt Everest's new height
Mt Everest's new height

By

Published : Dec 8, 2020, 3:07 PM IST

உலகில் மிகப்பெரிய சிகரமான எவரஸ்ட் சிகரம் இமயமலைத் தொடரில் நேபாள நாட்டிற்கு எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. இந்த சிகரத்தின் புதிய உயரத்தை நேபாள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி பழைய உயரத்தைவிட எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 0.86 மீட்டர் அதிகரித்து 8848.86ஆக உயர்ந்துள்ளது.

2015ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் உலகையே உலுக்கியது. இந்த நிலநடுக்கம் காரணமாக எவரஸ்ட் சிகரத்தின் உயரம் மாறியிருக்கலாம் என்று பல துறைசார்ந்த வல்லுநர்களும் கருத்து தெரிவித்தனர்.

இதையடுத்து எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை கணக்கிடும் பணியை சீன அரசுடன் இணைந்து நேபாள அரசு மேற்கொள்ள தொடங்கியது. சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த 2019ஆம் ஆண்டு நேபாளம் சென்றபோது இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

முன்னதாக, கடந்த 1954ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8848 மீட்டர் என கணக்கிடப்பட்டு, உலகின் மிக உயரமான சிகரம் என்று அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: கலிபோர்னியாவின் அடுத்த சுகாதாரத் துறைச் செயலர் இவர்தான்? - அறிவித்த ஜோ பைடன்

ABOUT THE AUTHOR

...view details