தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

எவரெஸ்ட் சிகரத்திலிருந்து 3 டன் குப்பைகள் அகற்றம்! - 3 TONE

காத்மாண்டு: எவரெஸ்ட் சிகரத்தில் தேங்கியிருந்த 3 ஆயிரம் கிலோ குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக நேபாள அரசு தெரிவித்துள்ளது.

குப்பைகள் அகற்றம்

By

Published : Apr 30, 2019, 7:26 PM IST

இதுகுறித்து அந்நாட்டு சார்பில் கூறியுள்ளதாவது, உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட்டில், 3 ஆயிரம் கிலோ குப்பைகள் உள்ளதாக சமீபத்தில் கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து எவரெஸ்ட் சிகரத்தை தூய்மைப்படுத்த முடிவு செய்து கடந்த 14ஆம் தேதி முதல் தூய்மைபடுத்தும் பணிகளை, தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. இதில் இதுவரை சுமார் 3ஆயிரம் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. மலையேறுவோர்கள் விட்டுச் சென்ற சமையல் பொருட்கள், கூடாரங்கள் போன்றவை அதிகளவில் இருந்ததாகவும், இறந்த கிடந்த சில உடல்களும் மீட்கப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவரெஸ்ட் சிகரம்

மேலும் எவரெஸ்ட் சிகரத்தில் எஞ்சியுள்ள 10 ஆயிரம் கிலோ அளவிலான குப்பைகளை அகற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 1953ஆம் ஆண்டில் எட்மெண்ட் ஹிலாரி, டென்சிங் ஆகியோர் முதன்முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details