பாகிஸ்தானில் கரோனா பெருந்தொற்று காரணமாக, ரமலான் மாதத்தில் தொழுகைக்காக மசூதிகள் திறக்கப்படுமா... இல்லையா... என்ற குழப்பம் நிலவிவந்தது.
இந்தக் குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ரமலான் மாதத்தில் மசூதிகள் திறக்கப்படும் என அந்நாட்டு அதிபர் ஆரிஃப் அலி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால், அதேவேளையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும்; அதனை மக்கள் கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மதத் தலைவர்களுடன் இன்று நடத்திய ஆலோசனைக்குப் பிறகு, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.