கோவிட்-19 வைரஸ் தொற்று தற்போது ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் வேகமாக பரவிவருவதாக உலக சுகாதரா அமைப்பு வேதனை தெரிவித்திருந்தது. இந்நிலையில், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள மக்களை வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இதுவரை 1,036 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ரஷ்யாவில் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்த நால்வரும் மாஸ்கோவைச் சேர்ந்தவர்கள்.
ரஷ்யாவில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக அந்நாட்டிலுள்ள அனைவருக்கும் இன்று (மார்ச் 8) முதல் ஏப்ரல் 5 வரை சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாள்களாக அதிபர் புதின் அறித்தார். இந்த நாள்களில் மாஸ்கோவிலுள்ள மக்களை வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.