தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 16, 2020, 10:40 PM IST

ETV Bharat / international

இந்திய - நேபாள பிரச்னை: சர்ச்சைக்குரிய நிலப்பரப்பு யாருக்கு சொந்தம்?

நேபாளத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இன்றைய சர்ச்சைக்குரிய நிலப்பரப்பை பற்றி கிழக்கிந்திய கம்பெனியுடன் கையெழுத்திடப்பட்ட நேபாளத்தின் சாகோலி ஒப்பந்தத்தில் உள்ள ஒரு பகுதியை வரலாற்று பார்வை மூலம் கட்டுரை ஆசிரியர் கணேஷ் சைலி விவரித்துள்ளார். அதன் தமிழாக்கம் இதோ...

இந்திய நேபாளம்
இந்திய நேபாளம்

தற்போது இந்திய இராணுவத்தின் மிகவும் சிறப்பான பிரிவை உருவாக்கும் வீரர்களின் முன்னோடிகள், 1765ஆம் ஆண்டில், ஐரோப்பிய ஒழுக்கத்தையும் ஆயுதங்களையும் பயன்படுத்த தெரிந்த பிறகு நேபாளத்தின் ப்ரிதி நரேன் தலைமையில், சுற்றியுள்ள மலை பழங்குடியினர் தங்களை ஒரு வல்லமைமிக்க சக்தியாக உணரத் தொடங்கினர்.

நேபாளத்தில் காத்மாண்டு, லலிதாபதான், பட்கான் ஆகியவற்றை கைப்பற்றிய பின் ப்ரிதி நரேன் இறந்த பிறகு, அவரது இளம்வயது மகனுக்கான ஆட்சியாளர்களாக, ப்ரிதி நரேனின் விதவை மனைவி மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் குமாவோனுக்கு தங்கள் வெற்றியை தொடர்ந்தனர்.

1790ஆம் ஆண்டு, அவர்கள் அல்மோராவைக் கைப்பற்றி, ராம்கங்கா வரையுள்ள மொத்த நாட்டிற்கும் அரசர்களாக மாறினர். குமாவோனில் இருந்து, மேற்கு நோக்கி தங்கள் பயணத்தை தொடர்ந்த கூர்க்காக்கள் கர்வால் மீது தங்கள் படையெடுப்பை தொடுத்தனர்.

ஆனால் நேபாளத்தின் மீதான சீனப் படையெடுப்பு பற்றிய செய்தியால் அதன் வெற்றி தாமதமானது, இதனால் அந்த படை கர்வாலில் இருந்து விலகி தங்கள் சொந்த நாட்டைக் காப்பற்றுவதற்கு சென்றது.

ஆயினும், சில ஆண்டுகளுக்குப் பிறகு, கூர்க்கா படையெடுப்பின் அலை மீண்டும் மேற்கு நோக்கி பாய்ந்தது: அப்போது கர்வால் ராஜாவின் தலைநகராக இருந்த ஸ்ரீநகர் பிப்ரவரி 1803ஆம் ஆண்டு தாக்கப்பட்டது, ராஜா தென்திசை நோக்கி பின்வாங்கினார். அவர் பராஹாட்டில் ஒரு பயனற்ற நிலைப்பாட்டை மேற்கொண்டதால் அங்கிருந்து முதலில் டூன்-னுக்கும், பின்னர் சஹரன்பூருக்கும் விரட்டப்பட்டார்.

துரத்தப்பட்ட ராஜா பிரத்யுமான் ஷா தனது சொத்துக்கள் மற்றும் சிம்மாசனங்கள் அனைத்தையும் அடமானம் வைத்து இரண்டு லட்சம் ரூபாய் திரட்டினார். அந்த நிதிகள் மூலம் அவர் ஒரு புதிய இராணுவத்தை ஒன்றிணைத்து, டூன்-னுக்கு திரும்பி, உமர் சிங் தாபாவின் கீழ் டெஹ்ராவை ஆக்கிரமித்திருந்த ஆக்கிமிப்பாளர்களைத் தாக்கினார். ஆனால், பின்னர் அவர் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

‘இமயமலை’, என்ற தனது புத்தகத்தில் ஜே.பி. ஃப்ரேசர், யமனோத்ரிக்கு அருகில் இருந்த பலிகர் பூசாரிகள், ப்ரதியுமான் ஷாவின் துரதிர்ஷ்டங்களை பற்றியும், கர்வால் மன்னர்களின் இறுதியையும், கூர்க்கா சக்தியின் எழுச்சி மற்றும் இறுதியில் பிரிட்டிஷாருக்கு அடிபணிவதையும் முன்னறிவித்ததாக குறிப்பிடுகிறார்.

கூர்க்கா அலை அடிவாரத்தின் வடக்கு பகுதிகளை அடைந்தது போல பிரிட்டிஷ் படைகள் சிவாலிகிராங்கின் செங்குத்தான தெற்கு பகுதிகளை அடைந்தன. அக்டோபர் 1803ஆம் ஆண்டு உமர் சிங் தாபா டெஹ்ராவை ஆக்கிரமித்த அதே நேரத்தில் கர்னல் பர்ன் சஹரன்பூருக்கு படையெடுத்தார்.

கூர்க்காக்களின் ஆட்சி கடுமையாக இருந்தது. இது பல குடிமக்களை இடம் பெயர்வதற்கு இட்டுச் சென்றது. அடிமைத்தனம் வேகமாக அதிகரித்தது; ஏதாவது ஒரு குற்றசெயல் செய்பவர்களும் வாழ்நாள் முழுவதும் அடிமைத்தனத்திற்கு ஆட்படுத்தப்பட்டனர். அநீதியும் கொடுமையும் ஆட்சியின் முழுமையாக இருந்ததாகக் கூறப்படுகிறது; நிலுவைத் தொகையை செலுத்தாத குடும்பங்கள் நிலுவைத் தொகையை கட்டுவதற்கு பெரும்பாலும் தங்களது சொத்துக்களை விற்றனர்.

உண்மையில் ‘குர்கானி’ என்பது கர்வாலில் உள்ள கூர்க்கா அராஜகங்களுக்கு மற்றொரு பெயராக மாறியது. கொடூரமான அந்த வீரர்கள் இரவில் ஒரு கிராமத்தில் உள்ள அனைத்து பாலையும் குடித்து விட்டு காலையில் தயிரைத் தருமாறு கேட்பார்கள்.

கூர்க்கா போரின் உடனடி விளைவுகளாக, சர்ச்சைக்குரிய எல்லை பிரதேசத்தில் ஒரு பெரும் தற்காப்பு நடவடிக்கைக்கு பின்னர், காவல் ஆய்வாளரை கொலை செய்து, பதினெட்டு கான்ஸ்டபிள்கள் கொல்லப்பட்டு அந்தக் காவல் நிலையத்தையும் அழித்தனர். அந்த சம்பவத்தில் மேலும் ஆறு பேர் காயமடைந்தனர்.

சில நாள்களில் மற்றொரு காவல் நிலையம் தாக்கப்பட்டது. தண்டனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அந்த தருணம் சாதகமற்றதாக இருந்ததால், நேபாள ராஜாவுக்கு மறுபரிசீலனை செய்வதற்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதற்கு அவர் துடுக்கான பதில் அனுப்பினார். 1814 நவம்பர் 1ஆம் தேதி போர் அறிவிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகளின் காரணங்களை “வில்லியமின் மெமாயர் ஆஃப் தி டூன்” இல் காணலாம்.

கலிங்கா என்று அழைக்கப்படும் நளபணி மலையில் அவசரமாக கட்டப்பட்ட கோட்டையில் வெறும் ஒரு சில வீரர்கள் மட்டுமே இருந்தது கூர்க்காக்களுக்கு ஏற்ற எதிர்ப்பாக இல்லை. அவர்களை பற்றி வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட எந்தவொரு செயலையும் போல அவர்கள் பிடிவாதமாகவும் வீரமாகவும் இருந்தார்கள்.

டூன் பள்ளத்தாக்கில், ரிஸ்பானாவின் கரையில் இரண்டு சிறிய சதுர தூண்கள் ஒரு தனித்துவமான நினைவுச்சின்னமாக நிற்கின்றன, இது வெற்றியையும் வென்றவர்களையும் நினைவுகூர்கிறது. ஒன்று ஜெனரல் கிலெஸ்பி மற்றும் அவருடன் மரணடைந்தவர்களின் நினைவாக; மற்றொன்று துணிச்சலான பல்பதார் சிங் மற்றும் துணிச்சல்மிக்க கூர்க்காக்களின் நினைவாக. இருப்பினும், 1815 நவம்பர் 17ஆம் தேதி சஹரன்பூர் மாவட்டம் இணைக்கப்பட்டது.

1815ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் ஜெனரல் ஓக்டெர்லோனி நேபாளிகளை கர்வால் மற்றும் குமாவோனில் இருந்து காளி ஆற்றின் குறுக்கே வெளியேற்றி அவர்களின் இருபது ஆண்டு ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவந்தார். வரலாற்றில் ஒரு காலத்தில் உத்தரகண்டில் நடந்த மிருகத்தனமும் அடக்குமுறையும் இன்றும் நினைவுகூரப்படுகிறது. கிழக்கே சிக்கிமில் உள்ள டீஸ்டாவிற்கும் மேற்கே சட்லெஜ் நதிக்கும் இடையில் வரும் அனைத்து நிலங்களையும் நேபாளர்கள் ஆக்கிரமித்து இருந்தனர்.

ஒரு பொது தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் 1815 டிசம்பரில் பிகாரின் சம்பாரனில் உள்ள சாகோலியில் கையெழுத்திடப்பட்டு அடுத்த ஆண்டு 1816இல் நடைமுறைக்கு வந்தன. இதையொட்டி, நேபாளம் தான் கைப்பற்றிய கிழக்கு மற்றும் மேற்கின் அனைத்து பகுதிகளையும், தேராய் பகுதியையும் கிழக்கிந்திய கம்பெனிக்கு கொடுத்தது. நேபாளத்தின் எல்லைக் கோட்டை நிறுவுவதற்கான ஒப்பந்தம், 2 டிசம்பர் 1815-ல் கிழக்கிந்திய கம்பெனிக்கும் ராஜ் குரு கஜராஜ் மிஸ்ரா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த சந்திர சேகர் உபாத்யாயா இடையில் கையெழுத்தானது.

அந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு மார்ச்4, 1816-ல் நடைமுறைக்கு வந்தது. இந்த ஒப்பந்தம் நேபாளி ஆங்கிலேயர்களிடம் சரணடைந்ததையும், நேபாளத்தின் மேற்கு நிலப்பரப்பை கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கியதையும் குறிப்பிடுகிறது.

நேபாளத்தை அதன் உண்மையான எல்லைகளுக்கு வரையறுத்து சிக்கிம், தெராய், குமாவோன் மற்றும் கர்வால் ஆகியவை ஆங்கிலேயர்களால் மீட்டெடுக்கப்பட்டன. உத்தரகண்ட் மாநிலத்தின் பிட்டோராகர் மாவட்டத்தில், (நேபாளர்கள் மகாகலி என்று அழைக்கப்படும்) சர்தா நதி இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையாக தீர்மானிக்கப்பட்டது. உண்மையில் கிழக்கு பகுதியில், பழைய எல்லை என்பது பீகாரில் உள்ள கிஷன்கஞ்சில் சமவெளிகளில் பாயும் மெச்சி நதியாக இருக்க வேண்டும்.

லிபுலேக் பாஸ் வழியாக மானசரோவருக்கு பயண தூரத்தை குறைக்க எல்லை சாலைகள் அமைப்பால் கட்டப்பட்ட சாலையால் தற்போதைய சர்ச்சை தோன்றியுள்ளது. மகாகலி ஆற்றின் மூன்று துணை நதிகளாக லிம்பியாதுரா, கலபானி மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தின் பிட்டோராகர் மாவட்டத்தில் உள்ள லிபுலேக் ஆகியவை உள்ளன.

மேற்குப் பகுதியில் உள்ள லிம்பியாதுரா தான் எல்லை என்று நேபாளிகள் கூறுகின்றனர். நாம் லிபுலேக் என்று நம்புகிறோம். இமயமலை நிலப்பரப்புள்ள தேசத்தில் ஒரு பெரிய செல்வாக்கைப் பெற்ற நேபாள கம்யூனிஸ்ட் அரசு சீனர்களால் ஊக்குவிக்கப்படுவதால், அவர்கள் இந்த சிறிய சர்ச்சையை தேவையில்லாமல் பெரிதாக்குகின்றனர்

யானைகள் சண்டையிடும் போது, ​​பூமி அதிரும், புற்கள் சேதமடையும். அண்மையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு பற்றிய செய்தி வெளியான போது, ​​எங்கள் மலை வாசஸ்தலத்தில் பணிபுரியும் ஒவ்வொரு நேபாள மக்களும் காணாமல் போனபோது, ​​இந்த பழமொழியின் உண்மை எனக்கு தெரிந்தது. அவர்கள் தங்களது வீட்டிற்கு திரும்பியிருந்தார்கள்.

திரு கணேஷ் சைலி அவர்கள் பல புத்தகங்களை எழுதியவர். இவரது படைப்புகள் சுமார் இருபது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, உலகளவில் அங்கீகரிக்கப்பட்டவர்.

இதையும் படிங்க: ”ஹஃகியா சோஃபியா” மீண்டும் மசூதி ஆவது மதச்சார்பற்ற நவீன துருக்கியின் தந்தையான கெமால் அட்டாட்டுர்க்கின் கொள்கைக்கு எதிரானது

ABOUT THE AUTHOR

...view details