தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

மியான்மரில் நிலச்சரிவில் சிக்கிய 50 பேர் பலி? - landslide

யாங்கூன்: மியான்மரில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 50 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

நிலச்சரிவில் சிக்கிய 50 பேர்

By

Published : Apr 24, 2019, 9:41 AM IST

வடக்கு மியான்மரின் காச்சின் மாகாணத்தில் பாகாண்ட் பகுதியில் செயல்பட்டுவரும் பச்சை நிற மாணிக்க கற்களை வெட்டியெடுக்கும் சுரங்கத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி இரவு 11.30 மணிக்கு நிகழ்ந்த இந்த நிலச்சரிவில் இரண்டு தனியார் நிறுவனத்தின் 54 தொழிலாளர்கள் 40 இயங்திரங்களுடன் சிக்கி கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இதுதொடர்பாக பேட்டியளித்துள்ள உள்ளூர் அதிகாரி டின் சோய், " நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை உயிரோடு இருப்பதற்கு சாத்தியமே இல்லை. இதுவரை மூன்று பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன " என்றார்.

இந்தாண்டு மட்டும் இதுவரை நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details