அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் சந்தித்த இரண்டாவது உச்சி மாநாடு வியட்நாம் தலைவர் ஹனோய்யில் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் நடைபெற்றது. இதில் எவ்வித உடன்படிக்கையும் எட்டப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வில் முடிந்தது. எனினும், இரு நாட்டுகளுக்கிடையே சுமூகமாக உறவு உள்ளது என ட்ரம்ப் தெரிவத்தார். இதற்கு பொருளாதார தடை குறித்த முரண்பாடே காரணம் என கூறப்பட்டது.
வட கொரியா ஏவுகணை சோதனை விவகாரம்: ஆலோசிக்கும் தலைவர்கள்! - north korea
சியோல்: வட கொரியா சமீபத்தில் ஏவுகணை சோதனை நடத்தியதாக கூறப்படுவது குறித்து, ட்ரம்புடன் தென் கொரியா அதிபர் மூன் ஜே ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த முடிவை கிம் ஜாங் உன் பின்னடைவாகவே கருதியதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறினர். இதன் விளைவாகதான் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடினை, கிம் சந்தித்து பேசினார் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 4ம் தேதி வடகொரியா கிழக்குக் கடல் பகுதியில் குறுகிய தூரம் வரை சென்று தாக்கும் சக்திகொண்ட ஏவுகணை சோதனை நடத்தியதாக கருதப்படுகிறது. இது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியதையடுத்து, அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், இது குறித்து தென் கொரியா அதிபர் மூன் ஜே, ட்ரம்புடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தென் கொரியாவின் யோன்ஹப் (yonhap) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.