தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பாதுகாவலரின் செல்ஃபோனில் ஆன்லைன் ஷாப்பிங் செய்த குரங்கு! - Monkey doing online shopping on Defender's cellphone

சீனா: வனப் பூங்காவில் பாதுகாவலரின் செல்ஃபோனை உபயோகித்து, குரங்கு ஆன்லைனில் பொருட்கள் ஆர்டர் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

குரங்கு

By

Published : Nov 13, 2019, 11:33 PM IST

சீனநாட்டின் சாங்ஜோ பகுதியில் யான்செங் (Yancheng Wild Animal World) வனவிலங்கு பூங்கா இயங்கி வருகிறது. அங்கு பணிபுரியும் பூங்கா பாதுகாவலர் எல்வி மெங்மெங் (Lv Mengmeng), சீன இ-காமர்ஸ் தளத்தில் தனக்குத் தினசரி தேவைப்படும் பொருட்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, ப்ரைமேட் (குரங்கு) பசியுடன் இருப்பதை உணர்ந்த பாதுகாவலர் செல்ஃபோனை, அங்கேயே வைத்துவிட்டு உணவு எடுக்கச் சென்றுள்ளார்.

பின்னர், மெங்மெங் அலுவலகத்திற்குத் திரும்பியபோது, ​​அவர் செல்ஃபோனுக்குச் சிலப் பொருட்களின் ஆர்டர் உறுதிப்படுத்தல் குறுந்தகவல் வந்தது. மேலும், அவர் தளத்தில் சேமித்து வைத்திருந்த அனைத்துப் பொருட்களும் ஆர்டர் ஆகியுள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால், பதறிப் போன பாதுகாவலர் உடனடியாக அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சியைப் பார்க்க ஓடியுள்ளார். அதில்,அவரது செல்ஃபோனை எடுத்து குரங்கு பயன்படுத்தும் காட்சி பதிவாகியிருந்தது.

இது குறித்து பாதுகாவலர் கூறுகையில்," ஈ-காமர்ஸ் தளத்தில் ஆண்டு விற்பனைக்கு முன்னதாகவே பொருட்களைத் தேர்வு செய்து வைத்திருந்தேன். ஆனால், ப்ரைமேட் (குரங்கு) எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் ஆர்டர் செய்ததால், என்னால் தள்ளுபடியையும் பெற முடியவில்லை. ப்ரைமேட் (குரங்கு) தன்னைக் கூர்மையாகக் கவனித்து, ஆன்லைனில் ஷாப்பிங் செய்யக் கற்றுக்கொண்டது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோவையில் நாய்களை துரத்தும் காட்டுயானைகள்: சிசிடிவி வைரல்

ABOUT THE AUTHOR

...view details