சீனாவில் உள்ள வன உயிரியல் பூங்காவில் விலங்குகள், பறவைகள், உள்ளிட்டவை வளர்க்கப்பட்டு வருகின்றன. இதில் குரங்குகள் செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லாமல் உள்ளது. வன உயிரியல் பூங்காவில் உள்ள குரங்கு ஒன்று, அதை தங்க வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி கூண்டை கல்லால் உடைக்கிறது.
கல்லைக் கொண்டு கண்ணாடியை உடைக்கும் குரங்கு! - china
சீனாவில் உள்ள வன உயிரியல் பூங்காவில் கூர்மையான கல்லைக் கொண்டு கண்ணாடியை உடைத்த குரங்கின் வீடியோ வைரலாகி வருகிறது.
Monkey
கூர்மையான கல்லைக் கொண்டு அந்த குரங்கு கண்ணாடிக் கூண்டை அடித்ததும் கண்ணாடி நொறுங்கியது. பின்னர், கண்ணாடி உடைந்ததும் அங்கிருந்து பயந்துக் ஓடியது. மேலும், இக்குரங்கு மற்ற குரங்கைப் போல் இல்லை கொஞ்சம் வித்தியாசமானது என்று பூங்காவில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அந்த குரங்கு கண்ணாடியை உடைத்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.