தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

மோடியின் மாபெரும் தவறு, சுட்டிக்காட்டும் இம்ரான் - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இம்ரான் கான்

இஸ்லாமாபாத்: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதன் மூலம் மாபெரும் வரலாற்றுப்பிழையை பிரதமர் மோடி நிகழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார்.

Imran
Imran

By

Published : Feb 6, 2020, 12:01 AM IST

பாகிஸ்தானில் உள்ள முசாபராபாத் மாகாணத்தில் உள்ள சட்டப்பேரவையில் அந்நாட்டின் முதலமைச்சர் இம்ரான் கான் இன்று உரையாற்றினார். அந்த உரையின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் இம்ரான்.

குறிப்பாக காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் குறித்து பேசிய அவர், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதன் மூலம் மாபெரும் பிழையை இந்தியப் பிரதமர் மோடி மேற்கொண்டுள்ளார். பாகிஸ்தானை வைத்தே இந்தியாவில் அரசியல் நடத்தும் மோடி, மாபெரும் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்ற மிதப்பில் இத்தகைய பிழையை செய்துள்ளார் என மோடி அரசின் மீது நேரடிக் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

மோடி அரசின் இந்நடவடிக்கை இருநாட்டு உறவில் பெரும் பிளவை உருவாக்கியுள்ளதாகவும், இவ்விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் மூன்று முறை விளக்கம் தெரிவித்துள்ளேன் எனவும் கூறினார்.

இதையும் படிங்க 'பலனளிக்குமா மத்திய அரசின் புதிய வரி விதிப்பு முறை?'

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details