தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இங்கும் மோடி சைவம்தான்! - ஷான்காய் ஒத்துழைப்பு அமைப்பு

பிஷ்கேக்: கிர்கிஸ்தானில் நடைபெற்றுவரும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்ற மோடிக்கு சைவ உணவு பரிமாறப்பட்டது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி

By

Published : Jun 14, 2019, 2:28 PM IST

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இன்றும் நாளையும் (ஜுன் 14, 15) நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களுக்கு கிர்கிஸ்தான் அதிபர் சூரன்பே ஜின்கெபேவ் சார்பில் நேற்று (ஜூன் 13) இரவு விருந்து அளிக்கப்பட்டது.

இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். சைவ உணவு பழக்கத்தை கடைபிடித்துவரும் பிரதமர் மோடிக்கு நேற்று இரவு நடைபெற்ற சிறப்பு விருந்தில் அவருக்கென பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட சைவ உணவு பரிமாறப்பட்டது.

சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விருந்தில் கிர்கிஸ்தான் முறையில் சமைக்கப்பட்ட சைவ உணவு பிரதமர் மோடிக்கு பரிமாறப்பட்டது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள்

இந்த விருந்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் பங்கேற்றார். ஆனாலும் இருவரும் பேசிக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details