தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பாகிஸ்தானில் மாயமான மூத்த பத்திரிகையாளர் வீடு திரும்பினார்! - சப்தார் கைது

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியின் மூத்த தலைவர் கைது செய்யப்பட்ட வீடியோ பதிவு குறித்து செய்தி வெளியிட்ட மூத்த பத்திரிகையாளர் மாயமான நிலையில், தற்போது வீடு திரும்பியுள்ளார்.

Pakistan senior journalist Ali Imran Syed,
Pakistan senior journalist Ali Imran Syed,

By

Published : Oct 25, 2020, 3:23 PM IST

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியின் மூத்த தலைவர் சப்தார். கராச்சியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த இவரை சிந்து மாகாணத்தைச் சேர்ந்த காவல்துறை கைது செய்தது. இதுகுறித்த சிசிடிவி வீடியோ பதிவினை, மூத்த பத்திரிகையாளர் அலி இம்ரான் சையது வெளியிட்டார்.

இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தனது தாயாரின் வீட்டில் தங்கியிருந்த இம்ரான் சையது அருகிலுள்ள் பேக்கரிக்கு சென்றுள்ளார். அரை மணி நேரத்திற்குள் வீடு திரும்புவதாக தெரிவித்துவிட்டு அங்கு சென்ற அவர், பல மணி நேரமாகியும் திரும்பவில்லை.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறை, பேக்கரி அருகில் உள்ள சிசிடிவி பதிவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவித்தது. பத்திரிகையாளரின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி சிந்து முதலமைச்சர் முரத் அலி ஷா, மாகாணத்தின் காவல்துறை இயக்குநருக்கு உத்தரவிட்டார்.

பத்திரிகையாளரை மீட்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது தெரியப்படுத்த வேண்டும் என உள்துறை அமைச்சகத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், மாயமான மூத்த பத்திரிகையாளர் அலி இம்ரான் சையது, தனது தாயாரின் வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details