தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

டிச 27 பேரணியில் மர்யம் உரை! - பெனாசிர் பூட்டோ

பாகிஸ்தான் நாட்டில் டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறும் பேரணியில் மர்யம் உரையாற்றுகிறார்.

Maryam to address rally Benazir's death anniversary PAkistan latest news Maryam to attend PPP rally மர்யம் பாகிஸ்தான் பெனாசிர் பூட்டோ பாகிஸ்தான் மக்கள் கட்சி
Maryam to address rally Benazir's death anniversary PAkistan latest news Maryam to attend PPP rally மர்யம் பாகிஸ்தான் பெனாசிர் பூட்டோ பாகிஸ்தான் மக்கள் கட்சி

By

Published : Dec 24, 2020, 10:19 PM IST

லாகூர்: முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் நினைவு விழாவில் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) தலைவர் பிலாவால் பூட்டோ-சர்தாரி அழைப்பின் பேரில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (பி.எம்.எல்-என்) துணைத் தலைவர் மரியம் நவாஸ், டிசம்பர் 27 ஆம் தேதி காரி குடா பக்ஷில் நடைபெறும் பேரணியில் உரையாற்றவுள்ளார்.

பெனாசிர் பூட்டோ இறப்பை ஆண்டுதோறும் நினைவுகூரும் வகையில் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) டிசம்பர் 27ஆம் தேதியன்று காரிகுடா பக்ஷில் பேரணியை நடத்துகிறது.

இதில், பாகிஸ்தானில் உள்ள முக்கியத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தாண்டு நடைபெறும் 13ஆவது நினைவு தினத்தில் நவாஸ் ஷெரிப்பின் மகள் மர்யம் கலந்துகொள்கிறார்.

இம்ரான் தலைமையிலான அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம் என்று சூளூரைத்துள்ள முக்கிய தலைவர்களில் மரியம் மற்றும் பிலாவல் ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நவாஸ் ஷெரீப் மகள் கைது!

ABOUT THE AUTHOR

...view details