சீன மக்கள், நாம் எளிதில் நினைத்துகூடப் பார்க்க முடியாத உணவு வகைகளான பாம்பு, நாய் ஆகியவற்றை அசால்ட்டாகச் சாப்பிடும் தன்மை கொண்டவர்கள். இருப்பினும் சீனாவில் திரி ஹூக்ஸ் (Three Squeaks) என்ற உணவு வகை தடை செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால், அந்த வகை உணவில் உயிருடன் இருக்கும் மூன்றுக்கும் மேற்பட்ட எலிக்குட்டிகளை சாஸில், நனைத்து அப்படியே சாப்பிடும் விநோதமான பழக்கம் நிலவுகிறது.
இந்நிலையில் ட்விட்டரில் ஒருவர், பகிர்ந்த காணொலி மக்கள் அனைவரையும் மிகப் பெரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதில், உணவகத்தில் ஒருவர் உயிருடன் இருக்கும் எலிக்குட்டிகளை ரசித்து மென்று சாப்பிடுகிறார்.
இதைப் பகிர்ந்த அந்த நபர், "என்னால் இதை நம்பவே முடியவில்லை. இந்த சமுதாயத்தில் புதிதாக பிறந்துள்ள எலிக்குட்டிகளை சாப்பிடுவது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று ஆகும். இந்த டிஷ் சீனாவில் தடை செய்யப்பட்டாலும் பல்வேறு உணவகத்தில் நடைமுறையில் இருக்கிறது" என சுவைபட விவரித்திருக்கிறார். இதைப் பகிர்ந்த மக்கள் பலரும், இந்த மனிதாபிமானம் அற்ற செயலுக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.