தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'லைசென்ஸ் வாங்கி 10 நிமிஷம் ஆகல' - ஆற்றுக்குள் காரை விட்ட ஓட்டுநர் - TAMIL ENWS

சீனா: ஓட்டுநர் உரிமம் பெற்று 10 நிமிடம் முடிவதற்குள் ஆற்றுக்குள் கார் பாய்ந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

CAR
CAR

By

Published : Mar 4, 2020, 3:08 PM IST

சீனாவில் குய்ஷோ மாகாணத்தில் உள்ள லாப்பிங் பாலத்தில் பயணிக்கும் கார் ஒன்று, ஆற்றுக்குள் பாயும் காணொலி சமூக வலைதளங்கில் பரவிவந்தது. இது குறித்து விசாரிக்கையில், அந்தக் காரை ஜாங் என்ற இளைஞர் ஓட்டிவந்துள்ளார். இந்த விபத்து நடைபெறுவதற்கு முன்புதான் அந்தக் காருக்கான ஓட்டுநர் உரிமத்தைப் பெற்றுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "நான் பாலத்தில் காரை திருப்பும்போது செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. அதைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது திடீரென்று பாலத்தில் இரண்டு பேர் நடந்து வந்துகொண்டிருந்தார்கள்.

நான் பயத்தில் திருப்புகையில் தடுமாறி கார் ஆற்றுக்குள் புகுந்துவிட்டது. உடனடியாகக் கதவை எட்டி உதைத்து வெளியே வந்துவிட்டேன். நல்வாய்ப்பாக எதுவும் ஆகவில்லை" என்றார்.

ஆற்றுக்குள் காரை விட்ட ஓட்டுநர்

இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், கிரேன் உதவியுடன் காரை நீரிலிருந்து வெளியே எடுத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:வீட்டில் கத்தியுடன் நுழைந்து மிரட்டியர்: சிசிடிவியில் சிக்கி கைது!

ABOUT THE AUTHOR

...view details