இது குறித்து மலேசியாவின் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் என்னும் செய்தித்தாளில் வெளியான தகவலில், "மலேசிய பிரதமர் முஹைதீன் யாசின், அந்நாட்டு சுகாதார மற்றும் அறிவியல் அமைச்சக உயர் அலுவலர்களுக்கு, கோவிட்-19 தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களிடம் நாட்டின் 70 விழுக்காடு மக்களுக்குத் தேவையான கோவிட் தடுப்பூசிகளை வாங்க ஒப்பந்தம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே மலேசியா சுகாதாரத் துறை, 12.8 மில்லியன் கோவிட்-19 தடுப்பூசிகள் வாங்க அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான ஃபைசருடன் ஒப்பந்தம் செய்துள்ளது.