தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஜப்பான் இளவரசியாக கடைசி பிறந்தநாளை கொண்டாடிய மாகோ! - மாகோ

ஜப்பானிய இளவரசி மாகோ, சாமானியனை திருமணம் செய்துகொள்வதால், இளவரசியாக தனது இறுதி பிறந்தநாளை கொண்டாடினார்.அவருக்கு வயது 30. ஜப்பானிய அரச குடும்ப நடைமுறைபடி, அக்குடும்பத்தில் உள்ளவர்கள் சாமானியரை திருமணம் செய்துகொண்டால், அரச குடும்பத்தின் பொறுப்புகளில் இருந்து விலக்கிவைக்கப்படுவர்.

mako celebrates his final birthday, japan princess, ஜப்பான் இளவரசி, டோக்கியோ, ஜப்பான், மாகோ, மகோ
ஜப்பான் இளவரசியாக கடைசி பிறந்தநாளை கொண்டாடும் மாகோ

By

Published : Oct 23, 2021, 6:22 PM IST

Updated : Oct 24, 2021, 5:34 PM IST

டோக்கியோ (ஜப்பான்): தனது காதலனை கரம்பிடிப்பதால், இளவரசியாக தனது கடைசி பிறந்த நாளை கொண்டாடும் மாகோ குறித்த செய்தி சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

ஜப்பானின் 125ஆவது பேரரசர் அகிஹிட்டோவின் பேத்தியான மாகோ, 2012ஆம் ஆண்டு தன்னுடன் கல்லூரியில் படித்த, கீ கோமுரோ என்னும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த நண்பருடன் நட்பாகப் பழக ஆரம்பித்தார். பின்னர் இருவருக்கும் இடையில் காதல் துளிர்விட்டது. தொடர்ந்து, 2017ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்தனர்.

பல நூற்றாண்டுகளாகத் தொடரும் அரசு வழக்கப்படி, இளவரசி சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த நபரை திருமணம் செய்து கொண்டால், அவர் தனது அரச பட்டத்தை துறக்க வேண்டும்.

ஆனால், இளவரசி மாகோ ஒரு படி மேலாக காதலனை கரம் பிடிப்பதற்காக தனது அரச பட்டத்தைத் துறந்ததுடன், அரசு நிதியுதவியும் வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார். இது, மக்கள் வரிப்பணத்தில் இருந்து வழங்கப்படுவதால் தனக்கு கொடுக்கப்படும் சுமார் 1.35 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை நிராகரித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

மாகோவின் நல்ல மனதிற்கு சமூக வலைதளவாசிகள் அவரைக் கொண்டாடி வரும் வேளையில், அரச குடும்ப விதிமுறைகளையும் வெகுவாக விமர்சித்து வருகின்றனர். இளவரசி மாகோவின் திருமணம் இம்மாதம் இறுதியில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. திருமணத்திற்குப் பின் அவர்கள் இருவரும் அமெரிக்காவில் குடியேற வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இச்சூழலில், அவர் இளவரசியாக தனது கடைசி பிறந்தநாளை இன்று கொண்டாடினார். 30 வயதில் கால் பதித்திருக்கும் மாகோவுக்கு உலக மக்கள் அனைவரும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:சொத்தும் வேண்டாம் பட்டமும் வேண்டாம் காதல் ஒன்றே போதும் - இளவரசியின் இதயக்கதை

Last Updated : Oct 24, 2021, 5:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details