தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இலங்கை பிரதமராக மீண்டும் மஹிந்த ராஜபக்ச புத்த ஆலயத்தில் பதவியேற்பு!

கொழும்பு: இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றதையடுத்து,மீண்டும் பிரதமராக மஹிந்த ராஜபக்ச புத்த ஆலயத்தில் பதவியேற்றுக் கொண்டார்.

ராஜபக்ச
ராஜபக்ச

By

Published : Aug 9, 2020, 2:47 PM IST

இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில், மொத்தமுள்ள 225 தொகுதிகளில் மகிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி 145 தொகுதிகளைக் கைப்பற்றியது. இதனால் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைத்தது.

இந்நிலையில் அந்நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்ச இன்று (ஆகஸ்ட் 9) மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். கொழும்புவின் வடக்கில் உள்ள ராஜமஹா புத்த ஆலயத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதில் இலங்கை அதிபரும், மஹிந்த ராஜபக்சவின் இளைய சகோதரருமான கோத்தபய ராஜபக்ச பங்கேற்று பதவிப்பிராமணம் செய்து வைத்தார்.

நடந்து முடிந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ச 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இத்தனை வாக்குகள் இலங்கை அரசியல் வரலாற்றில் வேறு எந்த வேட்பாளருக்கும் கிடைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இலங்கையில் அசூர வெற்றியை பதிவு செய்த ராஜபக்ச!

ABOUT THE AUTHOR

...view details