தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

மீண்டும் இலங்கை பிரதமரானார் ராஜபக்ச !

கொழும்பு: இலங்கையின் பிரதமராக மகிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாக இன்று பதவியேற்றுக்கொண்டார்.

By

Published : Nov 21, 2019, 1:18 PM IST

Mahinda Rajapaksa

இலங்கையில் கடந்த சனிக்கிழமை அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில், இலங்கை பொதுஜன பெரமுனா சட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றார்.

இதனையடுத்து, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு பேசிய ரணில் "நாடாளுமன்றத்தில் எங்கள் கட்சிக்கு (ஐக்கிய தேசியக் கட்சி) பெரும்பான்மை இருந்தாலும், அதிபர் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து என் பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறேன்" என்று விளக்கமளித்தார்.

பிறகு, இலங்கை அதிபர் ராஜபக்ச தன் மூத்த சகோதரரான மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தார். அதன்படி, மகிந்த ராஜபக்ச இலங்கையின் இடைக்கால பிரதமராக இன்று பதவியேற்றுக்கொண்டார். அவர் இலங்கை பிரதமராக மூன்றாவது முறையாகப் பதவியேற்றுள்ளார்.

முன்னதாக, 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் தேதி முன்னாள் அதிபர் மைத்ரபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தார். இந்த நியமனம் இலங்கை அரசியல் சாசன சட்டத்துக்கு முரணானது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்ச டிசம்பர் 15ஆம் தேதி பதவி விலகினார்.

இதையும் படிங்க: 'பயங்கரவாதிகளுடன் உள்ளூர் குற்றவாளிகள் உறவு அச்சுறுதல்' - அக்பரூதின் பேச்சு

ABOUT THE AUTHOR

...view details