மலேசியாவில் ஆளுங்கட்சிக் கூட்டணிக்கு இடையே ஏற்பட்ட விரிசல் காரணமாக உலகின் மூத்தப் பிரதமர் என்ற பெருமை பெற்ற மகாதீர் முகம்மது (94) கடந்த திங்கள்கிழமை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, அந்நாட்டில் அரசியல் குழுப்பம் நிலவிவந்தது. இதனிடையே, ஆளும் 'Pact of Hope' கூட்டணிக் கட்சிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து மகாதீர் முகம்மதை பிரதமர் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று திடீர் திருப்பமாக மலாய் அரசர் சுல்தான் அப்துல்லா முன்னாள் உள்துறை அமைச்சர் முஹைதீன் யாசினை அந்நாட்டின் பிரதமராக நியமித்தார்.