இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜகார்த்தா மாகாணத்தில் இன்று காலை 11.30 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி சமவெளியில் தஞ்சம் அடைந்தனர்.
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் - ரிக்டரில் 6.2 ஆக பதிவு
இந்தோனேசியா: ஜகார்த்தா மாகாணத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம்
ஆனால் உயிர் சேதமோ, பொருட்சேதமோ குறித்து விவரங்கள் வெளியாகவில்லை. கடந்த 2004ஆம் ஆண்டு சுமத்ரா தீவில் ரிக்டர் அளவுகோலில் 9.1ஆக பதிவான நிலநடுக்கத்தால், சுனாமி தாக்கி பலர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.