நேபாள பிரதமர் சர்மா ஒலி சில நாள்களுக்கு முன்பு நேபாள வரைபடத்தில் இந்திய பகுதிகளை இணைத்து புதிய வரைபடத்தை வெளியிட்டது நேபாளத்திலும், இந்தியாவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கடவுள் ராமர் நேபாளியா? சர்ச்சையை ஏற்படுத்திய சர்மா ஒலி - நேபாள வரைபடத்தில் இந்திய பகுதி
ஹைதராபாத்: கடவுள் ராமர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர். உண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது என நேபாள பிரதமர் கே.பி சர்மா ஒலி கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்த கருத்துகள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
lord-ram-is-nepali-says-oli
இதையடுத்து சர்மா ஒலி இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடுகளை எடுத்துவருவதாக கூறி அவர் பதவி விலக வேண்டும் என நேபாள நாட்டில் இருக்கும் எதிர்க்கட்சிகளும், அவரது கட்சி உறுப்பினர்கள் சிலரும் கோரிக்கைகள் விடுத்துவருகின்றனர்.
இந்நிலையில், ராமர் நேபாள நாட்டை சேர்ந்தவர்.உண்மையான அயோத்தி நேபாளத்தில் உள்ளது என்று அவர் தெரிவித்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.