2019 ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் திருநாளன்று இலங்கை தலைநகர் கொழும்புவில் அமைந்துள்ள மூன்று தேவாலயங்கள், சொகுசு விடுதிகளில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இதில் 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக 200-க்கும் மேற்பட்டவர்களைக் கைதுசெய்து இலங்கை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில், ஈஸ்டர் குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து முன்னதாக இலங்கை உளவுத் துறைக்குத் தகவல் கிடைத்தும் தடுக்காதது குறித்து விசாரிப்பதற்காக முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவிற்கு விசாரணைக்குழு அழைப்பாணை அனுப்பியுள்ளது. அதில் வரும் 26ஆம் தேதி முன்னிலையாகுமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.