தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

22 ஆண்டுகளுக்குப் பிறகு லாகூர்-வாகா இடையே ரயில் சேவை! - 22 ஆண்டுகளுக்கு பிறகு லாகூர் வாகா இடையே ரயில் சேவை

இஸ்லாமாபாத்: லாகூர்-வாகா ரயில் நிலைகளுக்கு இடையே 22 ஆண்டுகள் பிறகு மீண்டும் ரயில் சேவை தொடங்கவுள்ளது.

lahore Wagh train service, லாகூர் வாகா ரயில் சேவை
lahore Wagh train service

By

Published : Dec 9, 2019, 1:41 PM IST

181 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய ரயில், பாகிஸ்தானின் லாகூர் ரயில் நிலையத்திலிருந்து பஞ்சாப் மாநிலத்தில் உள்ள வாகா ரயில் நிலையம் வரை பயணிக்கும். டிசம்பர் 14ஆம் தேதி முதல் இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முன் ஏற்பாடுகள் நிறைவுற்றதாக தெரிவித்த பாகிஸ்தான் ரயில்வே துறை உயர் அலுவலர் அமிர் பலோச், "வாகா எல்லை அருகே நடக்கும் கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள பயணிகளுக்கு இந்த ரயில் சேவை உதவும். தினசரி இரண்டு வேளைகள் செயல்படும் இந்த ரயிலின் கட்டணமானது ரூ. 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.

சுதந்திரத்துக்குப் பிறகு 1997ஆம் ஆண்டு வரை இந்த ரயில் சேவை செயல்பட்டுவந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பிறகு பாதுகாப்பு, செயல்பாட்டு சிக்கல்கள் காரணமாக இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது. "தேவையிருந்தால் கூடுதலாக ரயில் பெட்டிகள் இணைக்கப்படும். மேலும், ஷாஷாரா, கேட் லாக்பாட், கோட் ராதா கிருஷ்ணா ரயில் நிலையங்களுக்கும் இந்த ரயில் சேவை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது" என அமிர் பலோச் கூறினார்.

இதையும் படிங்க : காஷ்மீர் கட்டுப்பாடுகளை நீக்க வலியுறுத்தி அமெரிக்காவில் மசோதா!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details