தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இந்தியா-சீனா சச்சரவு- எல்லையில் ராணுவம் குவிப்பு - இந்தியா சீனா எல்லைப் பிரச்னை

டெல்லி : எல்லைப் பிரச்னை காரணமாக இந்தியா-சீனா இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், எல்லைக் கட்டுப்பாடு கோட்டுக்கு அருகே இரு தரப்பினரும் தங்களது படையினரைக் குவித்துள்ளனர்.

diplomatic route
diplomatic route

By

Published : May 24, 2020, 9:19 AM IST

Updated : May 25, 2020, 11:44 AM IST

சமீப காலமாக இந்தியா-சீனா எல்லையில், இருநாட்டு பாதுகாப்புப் படையினர் இடையே மோதலை அதிகரித்து வருகிறது. இருதரப்பு ராணுவத்தினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசுவது போன்ற சம்பவங்கள் அரங்கேறுகின்றன.

இந்நிலையில், கடந்த வாரம் லடாக் பகுதியில் இந்திய எல்லைக்குள் சீன வீரர்கள் நுழைந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய பாதுகாப்புப் படையினரைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதனிடையே, மோதல் பெரிதாவதைத் தடுக்க அப்பகுதியில் இரு தரப்பினரும் தங்களது பாதுகாப்புப் படையினரைக் குவித்துள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஒரு அலுவலர் பேசுகையில், "இந்தப் பிரச்னைக்கு ஒரு வாரத்தில் தீர்வு காணப்படும். பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. எல்லை கட்டுப்பாடு கோடு அருகே இந்திய ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். சீனா அதன் படையையும் குவித்துள்ளது" என்றார்.

இதையும் படிங்க : தடுப்பூசி திட்டங்களில் காலதாமதம்... ஆபத்தில் 80 மில்லியன் குழந்தைகள் - எச்சரிக்கும் WHO

Last Updated : May 25, 2020, 11:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details