கிர்கிஸ்தானில் தேர்தல் முடிவுகள் தொடர்பாக நடைபெற்ற போராட்டம் காரணமாக அந்நாட்டின் அதிபர் சூரோன்பாய் ஜீன்பெகோவ் நேற்று பதவி விலகினார். அண்மையில் அங்கு நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
அதேவேளை, அதிபர் சூரோன்பாய் ஜீன்பெகோவ் அவரது கூட்டணி கட்சிகள் ஏழு வாக்குகளைப் பெற்றதேபோதும் எனக் கூறி நாடாளுமன்றத்தில் நுழைந்து ஆட்சி நடத்தலாம் என அறிவிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் குதிக்க, அவர்களுடன் பொதுமக்களும் கைக்கோத்ததால் அதிபர் பெரும் அழுத்தத்திற்குள்ளானார். எனவே, பொது அமைதியை பாதுகாக்க தான் பதவி விலகுவதாக அவர் அறிவித்தார்.
இதையடுத்து அந்நாட்டின் பிரதமர் சதிர் ஜாபரோவ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், "வரும் ஜனவரி 10ஆம் தேதிக்குள் அதிபர் தேர்தல் நடைபெற்று புதிய அதிபர் தேர்வுசெய்யப்படுவார். அதுவரை பிரதமரே பொறுப்பு அதிபராகச் செயல்படுவார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:”மிக மோசமான வேட்பாளருக்கு எதிராக நான் போட்டியிடுகிறேன்” - ட்ரம்ப் வருத்தம்!