ஐந்து நாள் சுற்றுப் பயணமாக பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளுக்குச் சென்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், சுற்றுப் பயணத்தின் இறுதி பயணமாக நேற்று ஜப்பான் தலைநகரம் டோக்கியோ சென்றார்.
டோக்கியோவில் நடைபெறும் பேரரசர் நருஹிடோவின் சிம்மாசன விழா இன்று நடைபெறவுள்ளதை அடுத்து, நேற்று அங்கு சென்ற அவருக்கு பலத்த வரவேற்பு தரப்பட்டது.
பின்னர், டோக்கியோவில் உள்ள சுகிஜி மாவட்டத்தில் அமைந்திருக்கும், ’சுகிஜி ஹோங்வான்ஜி’ என்னும் புத்தர் கோயிலுக்கு ராம்நாத் கோவிந்த் அவரது மனைவியுடன் சென்றிருந்தார். அது புத்தர் கோயில் என்பதால், அங்கு இந்தியாவில் இருந்து கொண்டு சென்ற போதி மரக்கன்றினை நட்டார்.
Kovind visits Buddhist temple in Tokyo மேலும் 19 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய குடியரசுத் தலைவர் ஜப்பான் தலைநகரம் டோக்கியோ சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மணிலாவில் மகாத்மா காந்தி சிலை திறப்பு