சியோல்: ஸ்பிரிங், சம்மர், ஃபால், விண்டர், 3-அயர்ன், அமேன், பியட் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியவர் தென்கொரியாவைச் சேர்ந்த இயக்குநர் கிம் கி டுக். 59 வயதான இவர், சிறந்த இயக்குநருக்கான சில்வர் லையன், கோல்டன் லையன், சில்வர் பியர் உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார்.
கடந்த மாதம் தனிப்பட்ட காரணங்களுக்காக லாத்வியா நாட்டில் சென்ற அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.