ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்திலுள்ள ஒக்லே தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் காடுகளில் கோலா வகை கரடிகள் நிறைய வசித்து வருகின்றன. இந்த காடுகளில் அண்மையில் தீப்பற்றி எரிந்தது. இதில் நூற்றுக்கணக்கான கோலா கரடிகள் உயிருடன் எரிந்து சாம்பலானது.
இந்த நிலையில் அப்பகுதி வழியே பயணித்துக்கொண்டிருந்த தைரியமான இளம்பெண் ஒருவர் தனது சட்டையை கழற்றி தீயில் துடித்துக் கொண்டிருந்த கோலா கரடி ஒன்றை காப்பாற்றினார்.
அந்த கரடிக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காட்டுத் தீயில் சிக்கி கோலா கரடியின் வயிறு, முகம் மற்றும் நெஞ்சுப் பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
கோலா கரடியை காப்பாற்றிய வீரபெண்மணி இந்த காயம் குணமாக சில காலம் பிடிக்கும் என்று கரடிக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர் கூறினார். தன்னுயிரை பணயம் வைத்து உயிருக்கு போராடிய கோலா கரடியை காப்பாற்றிய பெண்ணுக்கு உலகம் முழுக்க பாராட்டு குவிந்து வருகிறது. இதையும் படிங்க : பனிக்கட்டியைப் பார்த்ததும் என்ன ஒரு ஆனந்தம் அந்த பாண்டா கரடிக்கு!