வியட்நாம் தலைநகர் ஹானோவில் அமெரிக்கா - வட கொரியா இடையிலான இரண்டாம் உச்சி மாநாடு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதில் எவ்வித உடன்படிக்கையும் எட்டப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியை தழுவியது. இதனையடுத்து அணு ஆயுத தோதனை தளத்தை வட கொரியா மீண்டும் இயக்க உள்ளதாக வெளியான அதிகாரபூர்வமற்ற தகவலால் இரு நாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் உருவானது. எனினும், இருநாடுகளுக்கிடையேயான உறவு தொடர்ந்து நீடிப்பதாக அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வட கொரிய அதிபரை சந்திக்கும் புதின்! - putin
பியோங்யாங்: வட கொரியா தலைவர் கிம் ஜான் உன்னை வட கொரியா தலைவர் கிம் ஜாம் உன் அடுத்த வாரம் சந்தித்தி பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சீனாவிற்கு இம்மாதம் 26, 27 தேதிகளில் ரஷ்யா அதிபர் விளாதிமிர் புதின் அரசு முறை பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தை தொடர்ந்து வட கொரியா தலைவர் கிம் ஜான் உன்னை புதின் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக இரு நாட்டு அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் இம்மாதம் முதல் வாரத்தில், ரஷ்யா உள்துறை அமைச்சர் விளாதிமிர் கோலோகோல்ட்டெவ் வட கொரியா தலைநகர் பியோங்யாங்வில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
வியட்நாம் உச்சி மாநாடு தோல்வியை சந்தித்ததையடுத்து, ரஷ்யா உடனான உறவை வட கொரியா வலுப்படுத்த முயற்சிப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.