சீனா அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் அல்வியுடன் இரு நாட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், இரு நாடுகளும் கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கை, பொருளாதார விவகாரம் ஆகியவை குறித்து தீவிரமாக விவாதித்ததாகக் கூறப்படுகிறது.
அத்துடன், இரு நாடுகளும் ஜம்மு காஷ்மீர் குறித்தும், அங்குள்ள களச்சூழல் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியதாகச் சீனா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம், ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்றுள்ள இப்பேச்சுவார்த்தை இந்தியாவைச் சீண்டுவதாகத் தெரிகிறது.
ஆரம்பத்திலிருந்தே ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் எனத் தெரிவித்துவரும் நிலையில் தற்போது இந்தியாவின் முக்கிய அண்டை நாடுகளான பாகிஸ்தானும் சீனாவும் இந்த விவகாரத்தை விவாதித்ததாகக் கூறப்படுவது இந்திய வெளியுறவுத் துறைக்கு விடுக்கப்பட்ட சவலாகக் காணப்படுகிறது.
இதற்குப் பதிலடி தரும்விதத்தில் இந்திய வெளியுறவுத் துறை செயலர் ரவீஷ் குமார், காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றார். நாட்டின் இறையாண்மைக்கு எதிராகக் கேள்வி எழுப்பும்விதமாக எந்த நாடு செயல்பட்டாலும் அதை இந்தியா பொறுத்துக்கொள்ளாது எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:இந்திய - வங்கதேச உறவில் பொற்காலம் இது: பிரதமர் மோடி நெகிழ்ச்சி