ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலின் பிடி4 பகுதியில் நேற்று மாலை பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்துள்ளது. இதில் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக, அந்நாட்டு உள்துறை அமைச்சர் நுஸ்ரத் ரஹிமி தெரிவித்துள்ளார்.
காபுலில் வெடிகுண்டு தாக்குதல்: 4 பேர் காயம் - காபுல் வெடிகுண்டு தாக்குதல் 4 பேர் காயம்
காபுல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
Kabul exlplosion
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. முன்னதாக, இரண்டு வாரங்களுக்கு முன்பு காபுலில் நடைபெற்ற திருமண விழாவில், ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப் பேரை நிறுத்துவது குறித்து தாலிபான் பயங்கரவாத அமைப்புடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில், அந்நாட்டில் நடைபெற்று வரும் வெடிகுண்டு தாக்குதல்கள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.