ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கடந்த சனிக்கிழமை இரவு திருமண விழா நடந்தது. அப்போது அங்கு நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 63 பேர் பலியாகினர். 163 பேர் படுகாயமடைந்தனர்.
காபூல் மனித வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர் பலி! ஐஎஸ் பொறுப்பேற்பு - காபுல் திருமண விழா மனித வெடிகுண்டு தாக்குதல் ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்பு
காபூல்: 63 பேர் பலியாவதற்கு காரணமாக அமைந்த காபூல் மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
afghanistan
இதற்கு அமெரிக்க உள்ளிட்ட உலக நாடுகள் தங்களது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. இந்தத் தாக்குதலுக்கு நேற்று மதியம்வரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், ஐஎஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் உள்நாட்டுப் போரை நிறுத்துவது குறித்து தாலிபான் அமைப்பினருடன் அமெரிக்கா சமரச பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில், இந்தத் தாக்குதல் அரங்கேறியிருப்பது அந்நாட்டில் மீண்டும் அமைதி திரும்புவதைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
Last Updated : Aug 19, 2019, 12:07 PM IST