தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இம்ரான் கான் அரசை பதவியிறங்கும்படி மிரட்டும் மௌலானா ஃபஸ்லுர் - ஜமியத் உலெமா இ இஸ்லம் கட்சி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் இம்ரான் கான் அரசை கலைக்குமாறும் இல்லையெனில் அந்நாட்டை முடக்கிவிடுவோம் எனவும் ஜமித் உலெமா இ இஸ்லாம் தலைவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

jui f chief threatens to shut down pakistan

By

Published : Nov 4, 2019, 7:41 PM IST

Updated : Nov 4, 2019, 10:05 PM IST

பாகிஸ்தானில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக், பாகிஸ்தான் மக்கள் கட்சி (நவாஸ்), அவாமி தேசிய கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து அந்நாட்டு அரசுக்கு எதிராக கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, பெஷாவர் நகரில் இன்று நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஜமியாத் உலெம் இ இஸ்லாம் - எஃப் ( Jamiat Ulema e-Islam) கட்சி தலைவர் மௌலானா ஃபஸ்லூர் ரஹ்மான், "இது வெறும் பிளான் A-தான். எங்களிடம் B, C என பல திட்டங்கள் இருக்கிறது. சிறைகளில் இடம் இல்லாமல் தவிக்கப்போகிறீர்கள். நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதோடு, இந்த நாட்டையே முடக்கிவிடுவோம்" என மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையும் வாசிங்க :அரசுக்கு எதிரான கலவரத்தில் கொத்துக்கொத்தாகச் செத்துமடியும் மக்கள்!

முன்னதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தன் பதவியிலிருந்து விளக வேண்டும் என்று மௌலானா அவருக்கு இரண்டு நாள் கெடுவிதித்திருந்தார். பின்னர், அந்த காலக்கெடுவை நீட்டித்துள்ளார்.

பிரதமராகப் பதவியேற்ற வெறும் ஒரு வருடமே ஆன இம்ரான் கான், எதிர்க்கட்சியினரின் அழுத்தத்திற்குத் தலைசாய்க்கப் போவதில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் அரசுக்கு எதிராக 2014-ல் அந்நாடு முழுவதும் நடைபெற்ற தர்ணாவை விட இந்த போராட்டத்தில் மிகப்பெரியதாக உருவெடுக்கலாம்.

Last Updated : Nov 4, 2019, 10:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details