தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

காதல் திருமணம் - அரச பட்டத்தை துறந்த ஜப்பான் இளவரசி - கீ கோமுரோ

ஜப்பான் இளவரசியாக இருந்த மகோ, தனது காதலனை இன்று(அக்.26) திருமணம் செய்து அரச பட்டத்தை துறந்துள்ளார்.

ஜப்பான் இளவரசி
ஜப்பான் இளவரசி

By

Published : Oct 26, 2021, 4:08 PM IST

Updated : Oct 26, 2021, 4:33 PM IST

ஜப்பானின் 125ஆவது பேரரசர் அகிஹிட்டோவின் பேத்தி மாகோ. இவர் தன்னுடன் கல்லூரியில் படித்த, கீ கோமுரோ என்னும் சாமானியருடன் நட்பாகப் பழக ஆரம்பித்தார்.

பின்னர் இருவருக்கும் இடையே காதல் மலர, 2017ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்தனர்.

காதலுக்காக பட்டம் துறப்பு

ஜப்பான் அரச குடும்ப வழக்கப்படி, இளவரசி சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த நபரை திருமணம் செய்து கொண்டால், அவர் தனது அரச பட்டத்தை துறக்க வேண்டும்.

ஆனால், இளவரசி மாகோ ஒரு படி மேலாக காதலனை கரம் பிடிப்பதற்காக தனது அரச பட்டத்தைத் துறந்ததுடன், அரசு நிதியுதவியும் வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார்.

இது, மக்கள் வரிப்பணத்தில் இருந்து வழங்கப்படும் பணம் எனக் கூறி, தனக்கு கொடுக்கப்படவிருந்த சுமார் 1.35 மில்லியன் அமெரிக்க டாலர்( இந்திய மதிப்பின் படி சுமார் ஆயிரம் கோடி ரூபாய்) பணத்தை நிராகரித்துள்ளார்.

எளிய முறையில் திருமணம்

இந்நிலையில், இன்று மகோவுக்கும் கீ கோமுரோவுக்கும் எளிய முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. பாரம்பரிய கொண்டாட்டங்கள், சடங்குகள் ஏதுமின்றி இந்த திருமணம் நடந்துள்ளது.

இணை தங்கள் திருமண ஆவணத்தை அரச மாளிகையில் சமர்பித்துள்ளதாக அரச குடும்பம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் இன்று முதல் மகோ இளவரசி பட்டத்தை துறந்து சாமானிய பெண்ணாக வாழவுள்ளார். இருவரும் அமெரிக்காவில் வாழ்க்கை நடத்தவுள்ளதாக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கரோனா... ஊரடங்கு அமல்...

Last Updated : Oct 26, 2021, 4:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details