தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

தள்ளாடும் ஜப்பானின் ஏற்றுமதிச் சந்தை! - தள்ளாடும் ஜப்பானின் ஏற்றுமதி சந்தை

கரோனா நோய்க் கிருமித் தொற்றினால் உலகளவில் பொருளாதாரச் சந்தை வலுவிழந்து காணப்படுகிறது. இதில் ஜப்பான் நாட்டின் ஏற்றுமதி வணிகமும் தத்தளித்துவருவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

japan exports sink
japan exports sink

By

Published : Apr 20, 2020, 2:00 PM IST

ஜப்பான் நாட்டில் ஏற்றுமதி 11.7 விழுக்காடு அளவிற்கு சரிவைச் சந்தித்துள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவுக்கு வாகன ஏற்றுமதி குறைந்திருப்பது பெரும் பாதகமாகப் பார்க்கப்படுகிறது.

இது குறித்து அந்நாட்டின் நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 16.5 விழுக்காடு அளவிற்கு குறைந்துள்ளதாகவும், சீனாவுக்கான ஏற்றுமதி 8.7 விழுக்காடு அளவு சரிந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மொத்த இறக்குமதி ஐந்து விழுக்காடாக சரிந்துள்ளது. ஜப்பான் நாட்டில் இதுவரை 250 நபர்கள் கரோனா நோய்க் கிருமி பாதிப்பால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details