டோக்கியோ: ஜப்பான் நாடாளுமன்றம் இன்று கரோனா வைரஸுக்கு எதிராக செயல்படும் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவது தொடர்பாக ஒரு மசோதாவை ஒரு மனதுடன் நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதா தடுப்பூசிகளில் முன்னுரிமை, தடுப்பூசிகளுக்கான செலவுகள் ஆகியவற்றை நிர்வகிப்பதில் கவனம் செலுத்துகிறது.
இந்த மசோதா சட்டமாக்கப்பட்டபின் தடுப்பூசிக்கான அனைத்து செலவுகளை அரசு ஏற்றுக்கொள்வதற்கான சாதக மற்றும் பாதகமான விளைவுகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும். மருந்து நிறுவனங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகள் செய்யவும் வழிவகுக்கும்.