தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கரோனா பரவல்: அவசரநிலை பிரகடனப்படுத்த ஜப்பான் அரசு முடிவு - உலக அளவில் கரோனா பரவல் அதிகரிப்பு

கரோனா பரவல் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், ஜப்பானின் டோக்கியோ நகரில் அவசரகால நிலை பிரகடனப்படுத்த அந்நாட்டு அரசு முடிவுசெய்துள்ளது.

அவசர கால நிலை பிரகனடப்படுத்த ஜப்பான் அரசு முடிவு
அவசர கால நிலை பிரகனடப்படுத்த ஜப்பான் அரசு முடிவு

By

Published : Jan 6, 2021, 5:53 PM IST

டோக்கியோ:ஜப்பானில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் டோக்கியோ, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவசரகால நிலை பிரகடனப்படுத்த அந்நாட்டு அரசு முடிவுசெய்துள்ளது.

இது தொடர்பாகப் பேசிய அந்நாட்டுத் தலைமைச் செயலாளர் கட்சுனோபு கோட்டா கூறுகையில், "ஊரடங்கு தளர்வுகள் காரணமாக மக்கள் உணவு விடுதிகள், கேளிக்கை கூடங்களில் அதிகம் கூடுகின்றனர். இதனால் ஏற்படும் கரோனா பரவலைக் குறைக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

மேலும் மக்கள் உணவு விடுதிகளில் கூடுவதையும், வெளியே சுற்றுவதையும் தவிர்த்து, முடிந்தவரை வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்படுவார்கள்" என்றார்.

இந்நிலையில் உணவு விடுதிகள் இரவு 8 மணி வரை திறந்திருக்க அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல், சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா பாதுகாப்பு வழிறைகளைப் பின்பற்றி பள்ளிகள், உடற்பயிற்சி கூடங்கள், திரையரங்குகள் ஆகியவை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போதுவரை அந்நாட்டில், இரண்டு லட்சத்து 40 ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாயிரத்து 600 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க:கோவிட்-19 நிலவரம்: உலகளவில் 8.68 கோடி பேருக்கு பாதிப்பு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details