ஜப்பானின் டோக்கியோ மற்றும் ஒசாகா உள்ளிட்டப் பகுதிகளில் கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது. இதையடுத்து நாட்டின் சில பகுதிகளில் சுகாதார அவசர நிலையை அந்நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே அறிவிக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் ஷின்சோ அபே அரசாங்கம் சுகாதார அவசர நிலைக்கு இன்று (ஏப்ரல்7) காலை ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து டோக்கியோ, ஒசாகா உள்ளிட்டப் பகுதிகளில் இன்று முதல் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாகாணங்கள் உள்பட ஏழு மாகாணங்களில் சுகாதார அவசர நிலை அமலில் இருக்கும் என்றும் அந்த நாட்களில் கடைகள் எதுவும் திறந்திருக்காது. சட்ட விதிகளை மீறி செயல்படுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோவிட் 19 பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் 100 கோடி டாலர் நிதி தொகுப்பு உள்ளிட்ட திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பானில் கோவிட்19 வைரஸ் பாதிப்புக்கு நான்கு ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 80 ஆக உள்ளது.
இதையும் படிங்க: கரோனா பிடியில் 14 லட்சம் மக்கள்
!