உலகின் பல்வேறு நாடுகளிலும் தற்போது கரோனா பரவல் குறைந்துவருகிறது. இருப்பினும், சில நாடுகளில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதைத் தடுக்க அந்த நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இந்நிலையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ராணுவத்தில் இருக்கும் செவிலியரை அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்ப ஜப்பான் முடிவுசெய்துள்ளது. இது குறித்து ஜப்பான் அமைச்சரவைத் தலைமைச்செயலர் கட்சுனோபு கட்டோ கூறுகையில், "கரோனா பரவல் மோசமடைந்திருக்கும் இடங்களில் ராணுவ செவிலியரை அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.