தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

மூன்றாம் கட்ட கரோனா நிவாரணத் தொகையை அறிவித்த ஜப்பான்

ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா கரோனா வைரஸ் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில் பொருளாதார ஊக்குவிப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Japan PM orders drawing up of 3rd COVID-19 economic relief package
Japan PM orders drawing up of 3rd COVID-19 economic relief package

By

Published : Nov 10, 2020, 4:49 PM IST

டோக்கியோ: கரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பல்வேறு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸால் உலக நாடுகள் அனைத்திலும் பொருளாதார இழப்பு, உயிரிழப்புகள் அதிகரித்துவருகின்றன. இதனைக் கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் தங்களாலான முயற்சிகளை செய்து வருகின்றன.

இந்நிலையில், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா, அந்நாட்டின் உயர்மட்ட அமைச்சர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். அதில், கரோனா வைரஸால் அதிகளவு பாதிக்கப்பட்ட ஜப்பான் மக்களுக்கு பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மூலம் உதவ முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக புதிய பட்ஜெட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 2021ஆம் ஆண்டின் முதல் காலாண்டை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பை அதிகரித்தல், கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துதல், இயற்கை பேரிடர்களை கட்டுப்படுத்துதல் உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு இது தயாரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நாட்டில் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 70 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வேலை இழந்துள்ளதாக அந்நாட்டு தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்தது.

இதையும் படிங்க: ஜப்பான் நாட்டின் அடுத்த பிரதமர் ’யோஷிஹைட் சுகா’

ABOUT THE AUTHOR

...view details