கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, பெருந்தொற்று காலத்தில் ஜப்பானில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில், இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜப்பானில் தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, நாட்டில் குறைந்து வரும் பிறப்பு வீதத்தை அதிகரிக்க செய்யவும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் புதிய அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அமைச்சகங்களை அமைச்சர் டெட்சுஷி சாகாமோட்டோ கூடுதலாக கவனிப்பார் என ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா அறிவித்துள்ளார். பதவியேற்றதை தொடர்ந்து முதல் முறையாக செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சாகாமோட்டோ, "பெருந்தொற்றில் அதிகரித்துவரும் பெண்களின் தற்கொலை சம்பவங்கள் உள்பட நாட்டின் முக்கிய பிரச்னைகளை தீர்க்க தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்துறையின் அமைச்சராக நான் நியமிக்கப்பட்டுள்ளேன்.