பிரதமர் நரேந்திர மோடியுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, டிசம்பர் 15ஆம் தேதி இந்தியா வருகிறார். அப்போது அவர் வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் தலைநகர் இம்பால் செல்கிறார். இரண்டாம் உலகப் போரின் போது இரு நாட்டு படையினரும் இம்பாலில் தங்கியிருந்தனர். இருநாட்டு போர் வீரர்கள் தங்கியிருந்த போர்க்களமாக இம்பால் விளங்கியது. இதனால் அவர் அங்கு சென்று பார்வையிட உள்ளார்.
இப்போரை நினைவுகூரும் வகையில் அமைதி பூங்கா அருங்காட்சியகம் கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகத்துக்கு அபே செல்கிறார். அங்கு இரண்டாம் உலகப் போரின் உயிர் நீத்த வீரர்களின் ஆத்மா அமைதியடைய தியானம் மேற்கொள்கிறார்.