கரோனா வைரஸ் சமூக பரவல் காரணமாக, ஜப்பானில் சுகாதார அவசர நிலையை வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்க அந்நாட்டின் பிரதமர் ஷின்ஜோ அபே திட்டமிட்டுள்ளார். இதனை தலைமை அமைச்சரவை செயலர் யோஷிஹைட் சுகா தெரிவித்துள்ளார். ஜப்பானில் கரோனா பரவல் நிலைமையை மறு பரிசீலனை செய்த பின்னர், பிரதமர் இந்த முடிவுக்கு வந்துள்ளார்.
முன்னதாக டோக்கியோ மாகாண ஆளுநர் யூரிகோ கொய்கே, ஞாயிற்றுக்கிழமை (மே3) காணொலி வாயிலாக அளித்த செய்தியில், மாகாணத்தில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக உறுதிப்படுத்தினார்.
ஆனால் ஜப்பானின் மற்றொரு முன்னணி ஊடகம், “பாதிப்புகள் குறைந்த இடங்களில், மக்களின் மனச்சோர்வை சமாளிக்கும் முயற்சியாக பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் நூலகங்கள் உள்ளிட்டவைகள் திறக்கப்படலாம்” என தெரிவித்துள்ளது.
ஜப்பானில் டோக்கியோவில் கோவிட்-19 பாதிப்பாளர்கள் எண்ணிக்கை நான்காயிரத்து 600 இல் இருந்து திடீரென 15 ஆயிரமாக உயர்ந்தது. இதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: "நான் இறந்திருந்தால் ......"மனம் திறக்கும் போரிஸ் ஜான்சன்!