ஜப்பான் நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக அந்நாட்டின் நான்கு தென்மேற்கு மாகாணங்களில் வாழும் சுமார் 12 லட்சம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஃபுகுவோகா, சாகா, நாகசாகி, ஹிரோஷிமா ஆகிய மாகாணங்களில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்குப் பகுதிகளில் பல நாள்களாக கனமழை பெய்துவருவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார், இருவர் படுகாயமடைந்துள்ளனர். தற்போது அங்கு சில நாள்களுக்கு மழை பெய்யும் எனத் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க:கொத்துக் கொத்தாய் வெளியேறும் மக்கள், துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள்...’ - ஆப்கன் குறித்து அண்டோனியோ குட்டெரஸ் கவலை!