தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

60 ஆண்டுகளில் இல்லாத பாதிப்பு - 'ஹகிபிஸ்' புயலால் 14 பேர் உயிரிழப்பு! - ஹகிபிஸ் புயல்

டோக்கியோ: ஜப்பானைத் தாக்கிய ஹகிபிஸ் எனும் அதிபயங்கர சூறாவளி காரணமாக இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

Japan

By

Published : Oct 13, 2019, 12:48 PM IST

ஜப்பான் நாட்டைத் தற்போது ஹகிபிஸ் என்ற புயல் தாக்கியுள்ளது. இதனால் ஜப்பானில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவு வரலாறு காணாத வகையில் மழை பெய்து வருகிறது. ஜப்பானின் மத்திய, கிழக்கு, வடகிழக்கு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 16 பேர் மாயமாகியுள்ளனர். "இந்தப் புயலால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என ஜப்பான் நாட்டின் அதிகாரப்பூர்வ பிரதமர் அலுவலக ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் புயலால் ஜப்பானின் ரயில் போக்குவரத்தும் விமானப் போக்குவரத்தும் முற்றிலும் முடங்கியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவைச் சுற்றியுள்ள பல முக்கிய பகுதிகளிலும் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாறு காணாத இந்த வெள்ளத்தின் காரணமாக 60 லட்சம் ஜப்பானியர்கள் ஹோன்ஸ் தீவின் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக இன்று காலை ஜப்பானில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: #PrayforJapan: 'ஹகிபிஸ்' எனும் அதிபயங்கர சூறாவளி - பீதியில் ஜப்பானியர்கள்!

ABOUT THE AUTHOR

...view details