டோக்கியோ:பிட்டனின் தென் பகுதியில் கடந்த சில தினங்களாக உருமாற்றமடைந்த வீரியமிக்க கரோனா வைரஸ் பரவி வருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள், பிரிட்டன் உடனான அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்தன.
இந்நிலையில், வெளிநாட்டினர் ஜப்பான் நாட்டிற்குள் நுழை தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த தடை நாளை (டிச.28) முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.