டோக்கியோவில் உள்ள கவாசகி நகரில் பூங்கா ஒன்றின் வெளியே இருந்த பொதுமக்களை 40 வயது மதிக்கதக்க நபர் தான் கையில் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக தாக்கினார். உள்ளூர் நேரப்படி காலை 7.44 மணிக்கு நடைபெற்ற இந்தச் சம்பவத்தில், எட்டு குழந்தைகள் உட்பட 16 பேர் படுகாயமடைந்தனர்.
டோக்கியோவில் நிகழ்ந்த சரமாரி கத்திக் குத்து - 16 பேர் காயம் - stabbing
டோக்கியோ: ஜப்பானின் கவாசகி நகரில் எட்டு குழந்தைகள் உட்பட 16 பேர் கத்தியால் சரமாரியான தாக்குதலுக்கு உள்ளான நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
16 பேர் காயம்
இதனையடுத்து, அந்த நபரை சுற்றி வளைத்த டோக்கியோ காவல் துறையினர், அவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றார். முன்னதாக அந்த நபர் தன்னைத் தானே கத்தியால் குத்திக் கொண்டதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.