இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றார். அவருக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் முன்னாள் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து மஹிந்த ராஜபக்ச, தனது ட்விட்டர் பக்கத்தில், இருநாடுகளுக்குமிடையே இருக்கும் உறவினை மேம்படுத்தும் விதமாக இந்த சந்திப்பு இருந்ததாக பதிவிட்டுள்ளார். இந்த சந்திப்பின்போது, மஹிந்த ராஜபக்சவுடன் அவரது மகன் நாமல் ராஜபக்சவும் உடனிருந்தார்.