உலகின் முன்னணி 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஜி20 உச்சி மாநாடு ஜப்பான் தலைநகர் ஒசாகாவில் நடைபெற்று வருகிறது. ஒசாகாவில் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருடன் பிரதமர் மோடி முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
'இது வெற்றிக்கூட்டணி' : ட்ரமப், ஷின்சோ அபேவைச் சந்தித்த மோடி பெருமிதம்! - USA
டோக்கியோ: இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கூட்டுறவு வெற்றிக் கூட்டணி என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையின்போது, அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற மோடி, ஷின்சோ அபே ஆகியோருக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்தார். ஜப்பான்(J), அமெரிக்கா(A), இந்தியாவின்(I) கூட்டுறவை ஜெய் (JAI) என்று புதிய சொல்லாடலில் குறிப்பிட்டார் பிரதமர். இதன் மூலம் இது வெற்றிக்கூட்டணி என்ற பொருளில் இரு நாட்டு அதிபர்களிடமும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
அதன்பின்னர், மோடியும் ட்ரம்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் ஈரான், 5 ஜி, இரு நாட்டு உறவு, பாதுகாப்பு விவகாரம் ஆகியவை குறித்து ஆலோசித்ததாக மோடி தெரிவித்துள்ளார். மேலும், ட்ரம்ப், இரு நாடுகளும் சிறந்த நட்பு நாடுகளாக உருவெடுத்ததாகவும், ராணுவம், வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிவித்தார்.